
காவியத்தலைவன் படத்தில் 20 பாடல்கள் உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வசந்தபாலன் அரவான் படத்திற்கு பின்பு ஒரு வருட கால இடைவெளிக்கு பின்பு இயக்கியுள்ள படம் காவியத்தலைவன்.
1930களில் வாழ்ந்த நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சித்தார்த். பிரித்விராஜ். வேதிகா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஊடக சந்திப்பு சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.ஆர் ரஹ்மான், காவியத்தலைவன் படத்தில் 20 பாடல்களுக்கு மேல் இருப்பதாகவும், இப்படத்தில் நடிகர்களின் ஆர்வத்தைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்.
மேலும், இயக்குனர் வசந்தபாலன், நடிகை வேதிகா, நடிகர்களான சித்தார்த், நாசர், பாடலாசிரியர் பா. விஜய் ஆகியோரும் இந்த சந்திப்பில்பங்கேற்றனர்.





