அநுராதபுரத்தில்..
அநுராதபுரத்திலுள்ள பாதெனிய, பஹலபலல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 32 அகவையைக் கொண்ட தாயும் 3 அகவையைக் கொண்ட மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
வீதியில் சென்ற அவர்களை வாகனம் ஒன்று மோதிய போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனத்தில் பயணித்த 11 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் வாகன சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைய காலங்களில் விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.