பேஸ்புக் தொடர்பாக அதிபர்களுக்கு அறிவுறுத்தல்!!

697

FBகல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு பேஸ்புக் பயன்பாடு மற்றும் இணையம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புக்கள் குறித்து அதிபர்களுக்கு தெளிவுபடுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆறு அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் இந்த விசேட செயற் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த செயலமர்வு குறித்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கு முதலில் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகவும், இந்த விளக்கம் அளிக்கும் நிகழ்வு நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இணையப் பயன்பாட்டினால் பாடசாலை மாணவ, மாணவியர் எதிர்நோக்க நேரிடக் கூடிய பாதிப்புக்கள் குறித்து அதிகளவில் ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாடசாலை மாணவர், மாணவியர் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.