பேஸ்புக்கை தடை செய்தால் வீதியில் இறங்கி போராட்டம் : ரணில்

687

Ranilஇலங்கை அரசாங்கம் பேஸ்புக்கை தடை செய்யுமாக இருந்தால், மக்களுடன் மக்களாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவிருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தற்போது அரசாங்கத்தின் பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த கருத்துக்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்களை காரணம்காட்டி பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளமாக இருந்தால் அதற்கு எதிராக தாம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.