மலவாயில் தங்க பிஸ்கட்டுடன் மூதாட்டி கைது!!

525

Arrestedஇலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்துக்கு தங்கம் கடத்த முற்பட்ட மூன்று பேர் இரண்டு சந்தர்ப்பங்களில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தமிழகத்தின் திருச்சி நகரை நோக்கி செல்ல ஆயத்தமாக இருந்து இரண்டு பெண்கள் முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்படாத 500 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி 30 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மலவாயில் ஊடாக 300கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட 60 வயது மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 18 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.