சமூக ஊடகப் பயனர்களை பதிவு செய்ய அரசாங்கம் உத்தேசிக்கவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல!!

1123

கெஹலிய ரம்புக்வெல்ல..

சமூக ஊடகப் பயனர்களை பதிவு செய்ய அசராங்கம் உத்தேசிக்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்தேசிய நிறுவனங்கள் டிஜிட்டல் தகவல் கட்டுப்பாட்டின் மூலம் உள்நாட்டு வியாபாரங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிஜிட்டல் தளத்தின் ஊடாக பாரியளவிலான பணம் நாட்டை விட்டு வெளியே செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டிஜிட்டல் கட்டமைப்பை உரிய முறையில் ஒழுங்குபடுத்தாமையினால் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் டிஜிட்டல் கட்டமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும், உள்நாட்டு சமூக ஊடகப் பயனர்களை பதிவுக்கு உட்படுத்தும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.