ஊரடங்கு சட்டம் தொடர்பில்..
பண்டிகை காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பயண தடை விதிக்கப்படாத பிரதேசங்களில் அத்தியாவசியமின்றி தனிமைப்படுத்த எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பயண தடை விதிப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை என்ற போதிலும் அவசியம் ஏற்பட்டால் அதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-