அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

716

Ananthiவடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அம்மன் வீதி மற்றும் அரியாலை ஆனந்தன் கடை வீதி ஆகிய இரண்டு இடங்களிலும் மாநகர சபையின் அனுமதியில்லாமல் இயங்கி வந்த விடுதிகள், மசாஜ் நிலையம் ஆகியன நேற்று சுற்றிவளைக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வேண்டுகோளுக்கிணங்கள யாழ் பொலிஸார் மற்றும் மாநகர சபையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அங்கிருந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் அம்மன் வீதியில் இயங்கிய மசாஜ் நிலையத்திற்குள் அனந்தி தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளாதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.