அமெரிக்க டொலரின் பெறுமதி..
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மீண்டும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.05 ரூபாயாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 188.01 ரூபாயாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 80 சதமும் விற்பனை பெறுமதி 191 ரூபா 20 சதமுமாக காணப்பட்டது.
அதற்கமைய இந்த வருடத்தின் மே மாதம் நான்காம் திகதியின் பின்னர் அமெரிக்க டொலர் ஒன்று பதிவாகிய அதி கூடிய விலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.