கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்!!(படங்கள்)

500

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருமுறிகண்டி, வசந்த நகர் பகுதியிலுள்ள பழைய இரும்புப் பெருட்களை சேகரித்து விற்பனை செய்யும் வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரும்பு குவியலில் இருந்து இரும்புகளை எடுக்க முற்பட்டபோது அதனுள் இருந்த வெடி பொருளொன்று வெடித்ததனால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இவ்வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், உடனடியாக கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அழகர் இராமச்சந்திரன் (50), அழகர் இராமநாதன் (52) இராமச்சந்திரன் அல்லிநாயகி (44 ) தங்கபாண்டி மோகனகாந்தி, ஜெயராம் கிருஸ்ணவேணி ஆகியோரே படுகாயம் அடைந்தவர்களாவர்.

வெடிபொருள்கள் அகற்றப்பட்டதாக அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட பகுதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

333 334 335