புதையல் பொருட்களை கொள்வனவு செய்த நபர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம்!!

6575

புதையல் பொருட்களை..

புதையலில் கிடைத்ததாக கூறப்படும் சில பொருட்களை 5 லட்சம் ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்த நபர், அவை போலியானவை என அறிந்த பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்தவரின் தாய் முறைப்பாடு செய்துள்ளார் என எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாட்டுக்கு அமைய புதையலில் கிடைத்ததாக கூறி போலியாக தயாரிக்கப்பட்டிருந்த,

மாணிக்கக்கல், செம்பு மற்றும் புத்தர் சிலையை பணத்தை கொடுத்து கொள்வனவு செய்து, அவற்றை தன்வசம் வைத்திருந்த பிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

புதையலில் கிடைத்ததாக கூறி சிலர், இந்த பொருட்களை கைது செய்யப்பட்ட நபர் உட்பட மேலும் இரண்டு பேருக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த பொருட்களை பணம் கொடுத்து கொள்வனவு செய்த மூன்று பேரில் எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். போலியான புதையல் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை இன்றைய தினம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.