வெளிநாட்டு பெண்ணிடம் கொள்ளையிட்ட 18 வயது இளைஞன் கைது!!

1235

Arrestபுறக்கோட்டை பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 21 000 ரூபா இலங்கை பணம், வெளிநாட்டு கடனட்டை, கையடக்க தொலைபேசி, சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை இவ் இளைஞன் கொள்ளையிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தைச் சேர்ந்த 18 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று புதியகடை முதலாம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.