ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா!!

476

Rajani

ரஜினிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. ரஜினி நடித்துள்ள கோச்டையான் வரும் ஏப்ரல் 10ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களில் அனுஷ்காதான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இரண்டாம் உலகம் படத்தை அடுத்து பாஹுபலி, ராணி ருத்ரமம்மா தேவி என 2 டோலிவுட் பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படம் தமிழிலும் உருவாகிறது.

ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படங்களில் நடித்து வருவதால் கடந்த ஒரு வருடமாக புதிய படங்கள் எதையும் அனுஷ்கா ஒப்புக்கொள்ளவில்லை.

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் ரஜினியின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவரிடம் ரவிகுமார் பேச்சு நடத்தி வருகிறார் என கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.