பிரித்தானியாவில் பெண்ணொருவர் கொலை தொடர்பாக இலங்கையர் கைது!!

902

Arrestபிரித்தானியரொருவரை கொலைச்செய்தமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கோபிநாத் வெல்லச்சாமி என்பவர் மயூரதி என்ற பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவருடைய கொலை பொலிஸாரின் ஆடையில் பொருத்தியிருந்த புகைப்படக் கருவியில் வீடியோ காட்சிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கோபிநாத் வெல்லச்சாமியின் கரங்களில் இரத்தக்கறைகள் காணப்பட்டன.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான இவரை, கொலை இடம்பெற்று ஒரு சில நிமிடங்களிலே பொலிஸார் கைது செய்து விட்டனர்.

கொலையினை அயலவர் ஒருவர் தன்னுடைய வீட்டின் கீழ்மாடியிலிருந்த வேளையில் கண்ணுற்றுள்ளார். அயலவரான பெர்னடெத், மயூரதியின் கூக்குரலைக் கேட்டதுடன், உதவிக்காக அயலவர்களையும் அழைத்துள்ளார்.

வெல்லச்சாமி, மயுரதியின் கழுத்தில் பல முறை தொடர்ச்சியாக குத்தியுள்ளார். பொலிஸாரின் வருகைக்கு முன்னரே மயூரதியின் உயிர் பிரிந்துவிட்டது.

புன்னகைராஜா சேர்வராஜ் எனும் மற்றுமொரு இலங்கையருடன் மயுரதி புதிய உறவுமுறையினை பேணியமை தொடர்பில் கோபமுற்ற வெல்லச்சாமி அவரை கொலை செய்துள்ளார்.

தூரத்து உறவினரான ராஜ் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் இவர்களுடைய நெருங்கிய நண்பரானார். மயூரதி மீது கோபமுற்ற வெல்லச்சாமி தன்னை ஏன் ஏமாற்றுகின்றாய் எனக்கேட்டுள்ளார்.

மேலும் மயூரதி பாலியல் தொடர்புகளிற்காகவே ராஜ் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

32 வயதான மயூரதி ஒரு பிள்ளையின் தாயாவார். மயூரதி, ராஜ் உடன் தன்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பிலுள்ள வீட்டை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேல்மாடியில் வசித்து வந்த அயலவரொருவரிற்கு கீழ் வீட்டில் நிகழும் சண்டையின் சத்தம் கேட்டுள்ளது. மயூரதி உதவி நாடி உரத்த குரல் எழுப்பியுள்ளார். திருமதி ரெயிட் அவர்கள் நீச்சல் பயிற்சியிற்காக செல்லும் வழியில் யன்னலினூடாகவே இக்கொலையினை கண்டுள்ளார். அதையடுத்து பொலிஸாரிற்கு அறிவித்துள்ளார்.

ஒரு சில நிமிடங்களிளே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொலையாளியை கைது செய்துள்ளனர். 36 வயதான வெல்லச்சாமி இதற்கு முன்னர் இங்கிலாந்தில் இயோவில் பகுதியிலே வசித்து வந்துள்ளார்.

இலங்கையில் பெற்றோல் நிரப்பும் இடங்களில் தொழில்புரிந்த இவர், புலிகளிற்கு கையடக்க தொலைப்பேசிகளை விநியோகித்தார் என்று குற்றஞ்சாட்டப்படவுடன் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தார்.

இவர் தீவிர குடிபழக்கத்திற்கு அடிமையாகியதுடன், சூதாட்டத்திலும் ஈடுப்பட்டார். இவர் இல்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பினை ராஜ் மற்றும் மயூரதி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

இவருடைய அளவிற்கு மிஞ்சிய குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் தங்கியிருந்தவர்களுடன் தொடர்சியான முரண்பாடுகள் தோன்றின.
ராஜ் மற்றும் தனக்கிடையேயான உறவில் மயுரதி தலையீடு செய்வதாகக் கூறி தொடர்ச்சியாக பிரச்சினைப்பட்டார். தன்னுடைய பணத்தை ராஜ் கைப்பற்றி விடுவாரோ எனவும் அச்சமடைந்தார்.

இயோவில் பகுதியில் வாழ்ந்த 8 மாதக் காலப்பகுதியில் இவர் தொடர்சியாக அதாவது 34 வெவ்வேறு குற்றச்செயல்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கொலைக் குற்றத்தை நிராகரித்த வெல்லச்சாமி தான் கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதனைச் செய்யவில்லையெனவும், மயூரதி தன்னுடைய பாட்டியை கடுமையான வார்த்தையாகிய பழைய பொருள் எனக்கூறியமையினால் கடுமையான கோபமுற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இவருடைய பாதுகாப்பு தரப்பினர் கொலையாளி மன அழுத்தத்தினால் துன்புறுவதாக தெரிவித்துள்ளனர்.