சவுதியில் இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

650

Hangசவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வீட்டு உரிமையாளரால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இத்தற்கொலை இடம்பெற்றுள்ளதாக சவுதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரியாத் நகரில் பணிபுரியும் வீட்டு மலசலகூடத்தில் இருந்து பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது கணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததை அடுத்தே பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கணவன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட செய்தி அறிந்ததும் கணவன் இல்லாமல் வாழ்வதில் பயனில்லை என்று கூறியே பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சவுதி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.