வவுனியாவில் பூரண கடையடைப்பிற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் கூட்டாக ஆதரவு வழங்க வேண்டும் : நகரசபை உறுப்பினர்கள்!!

2318

கடையடைப்பிற்கு..

யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவு தூபியை இடித்து அழித்தமைக்கு எ திர்ப்பு தெரிவித்து வடக்கு- கிழக்கு பகுதியில் திங்கள் கிழமை இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போ.ராட்டத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் லரீப் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய அரசாங்கமானது சிறுபான்மை சமூகத்தினது உரிமைகளை மதிக்காது பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையுடன் சிறுபான்மை சமூகத்தின் மீது அ டக் குமுறை ஆட்சியை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் தமது உரிமைக்காக இந்த அரசாங்கத்திற்கு எ திராக கூட்டாக போ ராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கொரோனாவால் ம ரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வரும் நிலையில் கூட இந்த அரசாங்கம் ஜனநாயக வி ரோதமாக செயற்பட்டு வருகின்றது.

மக்களின் உரிமைகளையும், மத கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை தொடர்கின்றது. தமிழ் மக்கள் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட தமது உறவுகளின் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைத்திருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி கூட, இ றந்தவர்களின் நினைவு கூரும் உரிமையை மறுதலிக்கும் வகையில் இரவோடு இரவாக இ டித்து அ.ழிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதாவது தமது தாயகப் பிரதேசத்தில் கூட தமது உறவுகளை நினைவு கூர முடியாத நிலையில் சிறுபான்மை சமூகத்தை இந்த அரசாங்கம் அ டக்கி ஆளுகின்றது. இது ஒவ்வொரு தமிழ் மக்களின் மனங்களிலும் ப லத்த கா யங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எ திராக ஒட்டுமொத்த தமிழ் -முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு போ ராட வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அ ழிப்புக்கு எ திராக எதிர்வரும் திங்கள் கிழமை வடக்கு, கிழக்கு பகுதியில் பூரண கதவடைப்பு போ.ராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

குறித்த போ ராட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாமும் எமது ஆதரவைத் தெரிவிப்பதுடன், குறித்த கதவடைப்பு போ.ராட்டத்திற்கு அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களும் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஓருமித்த குரலில் தமது எ திர்ப்பை காட்ட முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.