கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் பையில் பெருந்தொகை பணம்!!

1900

யாசகரின் பையில்..

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வைத்தியசாலை ஊழியர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சில காலமாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 60 வயதுடைய நபர் திடீரென சுகயீனமடைந்துள்ளளார். குறித்த நபரை முச்சக்கர வண்டி சாரதிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்கள் அவரை சடலத்தை தகனம் செய்துள்ளனர். பின்னர் யாசகரின் பையை சோதனையிட்ட போது இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.