இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : புரட்சிமிக்க திட்டம் விரைவில்!!

1712

மகிழ்ச்சியான தகவல்..

இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புரட்சிமிக்க திட்டத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தின் பங்காளராக இலங்கை நிறுவனம் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டின் கிராமப்புற இளைஞர்களை பயன்படுத்தி இந்த திட்டத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கான இந்த திட்டத்திற்கு கிராமப்புற இளைஞர்களின் திறமையை பயன்படுத்தவுள்ள தீர்மானத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கமைய இலங்கையில் இந்த திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.