கதையே இல்லாத திரைப்படத்தில் பல பிரபலங்கள் : இயக்குனர் பார்த்திபன்!!

684

Partheepan

நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கும் புதிய படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.

எதையுமே வித்யாசமாக செய்யும் இயக்குனர் பார்த்திபன் இந்தப் படத்தின் பெயரிலேயே ஒரு புதுமையை காட்டியுள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என படத்தின் தலைப்பை வைத்துவிட்டு, இதன் துணை தலைப்பாக கதை இல்லா படம் என்று பெயரிட்டுள்ளர்.

100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு இந்தப் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஆர்யா, அமலாபால், பிரகாஷ்ராஜ், ந ஸ்ரியா ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம்.