
சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் அஜித்.
தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து தனக்கு புகார் கடிதங்கள் வந்து குவிந்ததாலும், சில ரசிகர்களின் பிரிவு தன்னை சிரமத்திற்கு ஆளாகியதாலும் இந்த முடிவை எடுத்திருந்தார்.
உலகில் உள்ள எந்த ஒரு முன்னிலை நடிகரும் செய்ய தயங்கும் காரியத்தை தன்னுடைய துணிச்சலால் செய்ய துணிந்தவர் அஜித்.
இந்த அதிரடி நடவடிக்கையை அஜித் செய்த போதிலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவையும், பாசத்தையும் காட்டி வந்தனர்.
சமீப காலமாக ரசிகர்களின் ஆதரவால் ஈர்க்கப்பட்டு ரசிகர் மன்றத்தை திறக்க மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஆனால் அரசியல் வசனங்கள் வைத்து போஸ்ட்டர்களை அடிக்கவோ, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ மன்றத்தை பயன்படுத்தக் கூடாது என்கிற எச்சரிக்கையை ரசிகர்களுக்கு விடுத்துள்ளார். எனினும் அஜித்தின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான.





