
ஆசிய கிண்ண இறுதி லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் சார்பில் அனமுல் ஹக் 49 ஓட்டங்களையும் சம்சுர் ரஹ்மான் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், அஜந்த மென்டிஸ், பிரியஞ்சன மற்றும் பெரேரா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு 205 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இலங்கை சார்பில் மத்திவ்ஸ் 74 ஓட்டங்களையும் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக மத்திவ்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கின்றது. இப் போட்டி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.





