சிறுமிக்கு ஆபாசப் படம் காட்டியவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

339

jailசிறுமி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பிழையாக வழிநடத்த முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து கெப்பதிகொல்லாவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் ராஜா சிறி மேவன் மஹேந்திர ராஜா குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முறைப்பாட்டு தரப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

நட்டஈடு செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனை அனுபவிப்பதோடு 1500 ரூபா அபராதமும் செலுத்த வேண்டுமென நீதிபதி அறிவித்துள்ளார்.