வவுனியா நகரில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!

1881

வவுனியா நகரில்..

வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் மூடப்பட்டுள்ளது என எச்சரிக்கை அறிவித்தல் சுகாதாரப் பிரிவினரினால் இன்றையதினம் (23.01.2021) ஒட்டப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் நகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மூடும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இன்றையதினம் (23.01) வவுனியா சூசைப்பிள்ளையார் குள வீதியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்கள் நிலையங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் கடமையாற்றுபவர்கள் பி.சி.ஆர் அல்லது அன்ரியன் பரிசோதனை செய்து,

அதற்குறிய அட்டையை வைத்திருக்காமையினால் இந் நிறுவனம் சுகாதார துறையின் பணிப்பின் பெயரில் மூடப்பட்டுள்ளது என்ற வசனம் தாங்கிய ஸ்டிக்கர் சுகாதாரப் பிரிவினரினால் ஒட்டப்பட்டது.

குறித்த பகுதியில் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறிய ஐந்துக்கு மேற்ப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு இவ் எச்சரிக்கை ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.