வவுனியாவில் “இலக்கண மரபுகளும் மொழி வரலாறும்” நூல் வெளியீடு!!(படங்கள்)

420

பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் எழுதிய இலக்கண மரபுகளும் மொழி வரலாறும் என்ற நூலின் வெளீயீட்டு விழா கடந்த மாதம் வவுனியா குருமன்காடு காளி கோவில் கலாசார மண்டபத்தில் ஆலய தலைவர் இ.கிருபாமூர்த்தி தலைமையில் இடம் பெற்றது.

தமிழ் வாழ்த்தினை ஞா.வசந் வழங்க ஆசியுரையினை ஆலய குரு செல்வ சர்மிலன் குருக்களும் வாழ்த்துரையினை சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் ல.சதீஸ்குமார் அவர்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீ.பிரதீபன் அவர்களும் வங்கி உத்தியோகத்தர் கவிஞர் ஐங்கரன் அவர்களும்,

கௌரவ விருந்தினர் உரையினை நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் விஜிதா செல்வகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர் உரையினை கலாபூசணம் கலாநிதி அகளங்கன் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா கணேசன் அவர்களும் நிகழ்த்த இலக்கண மரபுகள் அறிமுகவுரையினை தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்களான பொ.சத்தியநாதன் ,முருகேசு கௌரிகாந்தன் அவர்கள் வழங்க நன்றியுரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜன் அவர்களும் நிகழ்த்தினார்.

1 2 3 4 5 6