விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக பலி!!

1564

பொலிஸ் உத்தியோகத்தர்..

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வாரியபொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான பி.எச்.சி ஹேரத் (வயது 35) என்பவரே பலியாகியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையின் நிமித்தம் தனது சொந்த ஊரான வாரியபொலவிற்குச் சென்று கொண்டிருக்கும் போதே கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த வாகனத்துடன்,மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கேஸ் சிலிண்டர் வாகன சாரதியைக் கைது செய்துள்ள வெலிக்கந்தைப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.