கொரோனா..
கம்பஹா மாவட்டத்தில் 200 கொரோனா தொற்றாளர்கள் நேற்று வரை அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நேற்று மாலை குறித்த நோயாளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இடமில்லாமையினால் நோயாளிகள் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகி விடும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நோயாளிகள் அனைவரும் கடந்த 18ஆம் திகதிக்கு பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களாகும்.
கம்பஹா மாவட்டத்தில் வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் இடவசதி இல்லாமல் போயுள்ளதாகவும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியவர்களின் இடத்தில் இந்த நோயாளிகளை தங்க வைக்கவுள்ளாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.