
இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் வீரர்களுக்கு 7% சம்பள உயர்வை அறிவித்தது.
ஆனால் உலகக் கிண்ணம் போன்ற போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 20% தர வேண்டும் என்பது இலங்கை வீரர்களின் கோரிக்கை.
இதை நிராகரித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை , கிரிக்கெட் சபையின் 58% வருமானமே வீரர்களின் சம்பளத்துக்காக மட்டும் செலவிடப்படுகிறது. அதைவிட 7% சம்பள உயர்வையும் இந்த ஆண்டு அறிவித்துள்ளோம்.
இந்த நிலையில் இப்படி வீரர்கள் கோரிக்கை வைப்பது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளது.





