வவுனியாவில் மரக்கறி கடை ஒன்றில் மனித உருவில் மரவள்ளிக் கிழங்கு!!(படங்கள்)

545

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பட்டானிச்சூர் பகுதியில் உள்ள ஜெகீசன் என்பவரின் மரக்கறி விற்பனை நிலையத்தில் மனித உருவில் மரவள்ளிக் கிழங்கு ஒன்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றைய முன்தினம் (06) வவுனியா பிரதான மரக்கறி சந்தையில் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து கொண்டு தன்னுடைய கடையில் அவற்றை காட்சிப்படுத்திய போதே இதனைக் கண்டுள்ளார்.

மனிதனுடைய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள், உடல், தொப்புள் என அங்கங்களை அடையாளப்படுத்துவதாக மனித உருவில் இது காணப்படுகின்றது. இதனை அப் பகுதி மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

M1 M2 M3