குளியல் காட்சியில் நாயகன் நெஞ்சில் எட்டி உதைத்த நாயகி!!

616

Act

அருவியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி எட்டி உதைத்ததால் கடுப்பான நாயகன் படப்பிடிப்பை விட்டு வெளியேற முயன்ற சம்பவம் மறுமுகம் படப்பிடிப்பில் நடந்துள்ளது.

எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரித்து வரும் படம் தான் மறுமுகம். கமல் சுப்பிரமணியம் இயக்குகிறார்.

படத்தில் வரும் நீயில்லாத… என்ற பாடல் காட்சியை அருவியில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது படத்தின் நாயகி ஷில்பி நாயகனை எட்டி உதைப்பது போல் நடிக்க வேண்டும்.

இதில் நிஜமாகவே நாயகனை, நாயகி ஷில்பி எட்டி நெஞ்சில் உதைத்து விட நாயகன் கிஷிக்கு சரியான கோபம். தன்னை இதுவரை யாரும் இப்படி எட்டி உதைத்ததில்லை. இந்தப் பெண் தன் நெஞ்சில் மிதித்து விட்டாரே என கோபத்தில் படப்பிடிப்பிலிருந்து வெளியேறி ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டார்.

இதனால் படப்பிடிப்பு அதிக நேரம் தடைபட்டதால் நாயகி சென்று தனது வருத்தத்தை கிஷியிடம் தெரிவித்து அவரை சமாதானம் செய்தார். முதல் படமென்பதால் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியான வேகம் வந்து விட்டது. தவறு என்மீது தான். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று ஷில்பி தெரிவிக்க, ஒரு வழியாக அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்.

பிறகு சிரித்த முகத்தோடு அந்தப்பாடல் காட்சியில் நாயகியோடு நெருக்கம் காட்டினாராம் கிஷி. முழுப்படப்பிடிப்பும் முடிந்து விட்ட மறுமுகம் படம் மார்ச் 14ம் திகதி வெளியாகவுள்ளது.