வடிவேலு படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டல்!!

762

Vadivelu

வடிவேலு நடித்துக்கொண்டிருக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படத்தின் போஸ்டர்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

பல ஆண்டுகள் கழித்து வடிவேலு நடிக்கும் படம் என்பதாலும், மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தைப் போல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதாலும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடிவேலு நடிக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படதை வெளியிடக்கூடாது என்று சிலரால் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தெனாலிராமன் திரைப்பட தயாரிப்புக் குழுவிடம் பேசியபோது, முதலமைச்சர் தரப்பிலிருந்து அனுமதி கிடைத்த பிறகே வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தோம் என்று கூறுகின்றனர்.