ஈழப் பெண்ணாக வரும் நஸ்ரியா!!

537

Nasriya

புதிய பாதை படத்தில் இயக்குனர் – நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் அறிமுகமானார் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால், அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனபோதும் அவருக்குள் இருந்த இயக்குனர் அவரை துரத்திக்கொண்டேயிருந்ததால், ஜன்னல் ஓரம் படத்தில் பஸ் சாரதியாக நடித்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்றொரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில்கூட நடிக்கவில்லை. திரைக்குப்பின்னால் இயக்குனராக மட்டுமே இருக்கிறேன் என்று அப்படத்தின் தொடக்க விழாவின்போது தெரிவித்த பார்த்திபன், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதன்பிறகு என்ன நினைத்தாரோ, தனது மகள் கீர்த்தனாவை முக்கிய வேடமொன்றில் நடிக்க வைத்தவர், விஜயசேதுபதியை கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் இப்போது மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளையும் அவர் நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ், ஆர்யா.அமலாபால் ஆகியோர் நடிகராகவே நடிக்கிறார்கள்.

மேலும் நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியா, இலங்கையில் இருந்து வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறாராம். இதுதவிர இன்னும் சில பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.