வவுனியா உட்பட பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ்!!

2528

புதிய கொரோனா வைரஸ்..

பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபின் தொற்றுக்கு உள்ள சிலர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, அவிசாவளை, பியகமை, வவுனியா ஆகிய பிரதேசங்களில் பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் திரிபின் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸின் திரிபு அதிகளவில் பரவக் கூடியது என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.