சட்டவிரோதமான முறையில் 60 லட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்கத்தை கடத்திச் செல்ல முயன்ற பெண்கள் இருவர் உட்பட மூவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (08) இரவு இந்தியா நோக்கி பயணிக்க தயாரானபோது கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றில் செய்து முடிக்கப்படாத காப்பு, மோதிரம் மற்றும் தங்கச் சங்கிலிகள் இருந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் என லெஸ்லி காமினி குறிப்பிட்டார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கம் மேற்கொண்டுள்ளது.




