இலங்கையில் தினமும் 10 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்!!

696

ABUSE_SLஇலங்கையில் நாள்தோறும் பத்து பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உரிமைகளுக்கான மகளிர் அமைப்பு அறிவித்துள்ளது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் போது அல்லது வேறும் ஏதேனும் சந்தர்ப்பங்களில் 90 வீதமான பெண்கள் ஏதோவொரு வகையில் துன்புறுத்தப்படுகின்றனர்.

வருடமொன்றில் 18000 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பாதிவாகின்றன.

பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் போதைப் பொருள், மதுபான கடத்தல் நடவடிக்கைகளினால் பாரியளவில் சமூக சீரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.