வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று பாதுகாப்புப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

1261

ஊடகவியலாளர்களுக்கு..

வன்னி பிராந்தியத்தில் கொரோனா அச்சத்தின் மத்தியிலும் சிறப்பாக கடமைகளை முன்னெடுத்து வரும் ஊடகவியலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தன்னளர்வற்ற சமூக சேவை அமைப்பினால் கொரோனா தொற்று பாதுகாப்புப் பொருட்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலமையில் இன்று (15.02.2021) மதியம் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் வன்னி பிராந்தியத்தினை பிரதிப்படுத்தும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊடக அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர்களுக்கான கொரோனா தொற்று பாதுகாப்புப் பொருட்களை அரசாங்க அதிபர் மற்றும் தன்னலமற்ற சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து வழங்கி வைத்தனர்.