டில்ஷான் பிள்ளையை கடத்த முற்படுகிறார் : முன்னாள் மனைவி முறைப்பாடு!!

627

Dilshan

இலங்கை கிரிக்கெட் வீரர் டில்ஷான் தமது குழந்தையை கடத்த முற்படுவதாக அவரது முன்னாள் மனைவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

டில்ஷானும் அவரது மனைவியும் கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் டில்ஷானின் மகனை சனி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படடிருந்தது.

எனினும் நேற்று சனிக்கிழமை டில்ஷான் தமது மகனை கடத்த முற்பட்டதாக தெரிவித்து அவரது மனைவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.