
இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
இலங்கை அணி 5வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 1986, 1997, 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
வெற்றி குறித்து இலங்கை அணியின் அணித்தலைவர் மத்யூஸ் கூறுகையில், முக்கியமான ஆட்டங்களில் இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்து வந்தோம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினேன். தற்போது ஆசிய கிண்ணத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல வீரர்கள் அனைவரது கூட்டு முயற்சியால் வென்றோம்.நாணயசுழற்சியின் முக்கிய பங்கு வகித்தது என்று கருதவில்லை. மலிங்கவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இன்று நாடு திரும்புகின்றது. நாடு திரும்பும் இலங்கை அணி வீர்கள் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் நிறுவனம் அமைந்துள்ள கொழும்பு-7 வரை விசேட வாகனத்தில் பேரணியாக அழைத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





