T20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!!

502

ICCசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் தலா 123 புள்ளிகள் பெற்றாலும், சமீபத்தில் சர்வதேச 20 போட்டியில் விளையாடாத இந்திய அணி விகிதாச்சார புள்ளி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

துடுப்பாட்ட தர வரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கலம் முதலிடத்தில் தொடருகிறார். இலங்கை வீரர்கள் குமார் சங்ககார 11ம் இடத்திலும், குசல் பெரேரா 13ம் இடத்திலும், டில்ஷான் 14ம் இடத்திலும் மகேள ஜெயவர்த்தன 15ம் இடத்திலும் உள்ளனர்..

பந்து வீச்சில் மேற்கிந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில்நரின் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை அணி சார்பாக அஜந்த மென்டிஸ் 3ம் இடத்திலும், குலசேகர 9ம் இடத்திலும், மலிங்க 11ம் இடத்திலும் உள்ளனர்.

சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் முகமது ஹபீஸ் முதலிடத்திலும், ஷேன் வட்சன் இரண்டாவது இடத்திலும், யுவராஜ்சிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இலங்கை அணித் தலைவர் மத்தியூஸ் 7ம் இடத்தில் உள்ளார்.