வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம்நாளான நேற்று (09.03) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்து மதிய தீர்த்தக்கரையில் திருபொற்சுண்ணம் முதலியவை பாடப்பட்டு பக்தர்கள் தீர்த்தக்கரையில் இறைவனை நோக்கி கற்பூரம் கொளுத்தி விடுகின்ற அருமையான உற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து சுவாமி தீர்த்தக்கரையில் இருந்து விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் நாக வாகனதிலும் திரு வீதி உலாவந்து நேற்றைய திருவிழா ஐந்தே நிறைவு பெற்றது .
-கஜேந்திரன்-