முல்லைத்தீவில்..
தற்போது நடைபெற்றுவரும் 2020 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்ட சம்பவம் பதிவாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு சிலாவத்த பரீட்சை நிலையத்தில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.
மருதங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.