
சாகச வித்தைகளுக்கு கமர்ஷியல் சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு கிளாசிக் சினிமா என படம் இயக்கி வரும் சந்தோஷ் சிவன் இப்பொழுது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இனம் படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
ஈழத்தில் சிக்கி தன் குடும்பத்தை பறிகொடுத்த ஒரு சிறுமியை சந்தித்துள்ளார், அவரை பற்றி கேட்டதும் அதிர்ச்சியில் மூழ்கியதாகவும் அதன் பரதிபலிப்பாக தான் இனம் திரைப்படம் உருவாகியுள்ளாதாகவும் கூறியிருக்கிறார்.
அத்திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் சிவம் ஈனப்போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நிலையை விவரிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
இக்கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி மற்றும் சரிதா நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இலங்கை சென்று எடுத்திருந்தால் தன் கதைக்கு சில முட்டுகட்டைகள் கண்டிப்பாக வந்திருக்கும் என்பதால் ஈழக்கதை கேற்க சூழல் இங்கேயே கிரியேட் பண்ணிவிட்டதாகவும் சில காட்சிகள் ராமேஸ்வரம் சென்று எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் உலகம் அறிந்த இந்திய ஒளிப்பதிவாளர்.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கிய இக்கதை கண்டிப்பாக வெற்றியை எட்டும் என மக்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.





