மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மரணம்!!

1511

ஹஷேன் சம்பத்..

அம்பலங்கொட கரன்தெனிய பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளாார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் அருகில் இருந்த மின்சார தூணில் மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 22 வயதுடைய ஹஷேன் சம்பத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அவரது நண்பர்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.