போலி நாணயத்தாள்கள்..
நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவினால் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐயாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்றைய தினம் இரண்டு சந்தேகநபர்கள் களனி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் இந்த பணத்தைக் கொடுத்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஆயிரம் ரூபா மற்றும் ஐயாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாணத்தாள்களைப் பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.