விபத்து..

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12.03) காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியில் இருந்து வைரவபுளியங்குளம், புகையிரத வீதி நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை,

குருமன்காடு சந்தியில் இருந்து வவுனியா நகரம் நோக்கு புகையிரத வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்றது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கதக்க இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் ரக வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து உடனடியாகவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





