செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வர்த்தகநிலையமொன்று தீப்பற்றியதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று (16.03.2021) காலை செட்டிக்குளம் பகுதியில் உள்ள புத்தகசாலை ஒன்றே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று காலை குறித்த வர்த்தக நிலையத்தினிலிருந்து புகை வருவதினை அவதானித்த பொதுமகனாருவர் அருகில் சென்று பார்வையிட்ட சமயத்தில் குறித்த வர்த்தக நிலையத்திற்குள்ளே தீப்பற்றுவதை அவதானித்துள்ளார். அதன் பின்னர் குறித்த நபர் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் பிரதேச மக்கள் பலர் ஒன்று சேர்ந்து பல மணிநேர போ.ராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் குறித்த வியாபார நிலையத்திற்குள் இருந்த 10 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை செட்டிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





