வவுனியா மாவட்ட செயலகத்தில் மோப்பநாய் சகிதம் கடும் சோ.தனை!!

3087

மாவட்ட செயலகத்தில்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விசேட கடும் சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட அ.திரடிப் ப.டையினரால் இந்த சோ.தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் மோப்ப நாயும் சோ.தனை நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது பொலிஸார் பா.துகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் பல விருந்தினர்கள் வருகைதந்திருந்தனர். இந்த நிலையிலேயே இவ்வாறான சோ.தனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.