மன்னாரில்..
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளுமாறும் வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பேருந்து ஒன்று மோதுண்டதில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியானதுடன் மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த அனைவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்துத் தொடர்பில் அறிந்த பிரதேசவாசிகள் மாவட்ட வைத்தியசாலையை சூழ்ந்துள்ளதாகவும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.