தவிசாளர் அ.அமிர்தலிங்கம்..
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு குரங்கு கடித்த தேங்காயுடன் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அ.அமிர்தலிங்கம் வருகை தந்திருந்தார்.
வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது துணுக்காய் பிரதேசத்தில் குரங்கள் தென்னந்தோட்டங்களில் உள்ள தேங்காயினை க.டித்து சே.தப்படுத்தி அழித்து வருவதாக துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.
இதனால், குரங்கினை துரத்துவதற்கு து.ப்.பா.க்.கி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், து.ப்.பா.க்.கி.யி.னை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சி.ரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் சிபார்சு கடிதத்துடன் து.ப்.பா.க்.கி.யி.னை பெற்றக்கொள்ளலாம் என இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.