எயார் பூப்பந்து..
வடமாகாணத்திலேயே முதன்முறையாக இன்றைய தினம் எயார் பூப்பந்து அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மைதான வளாகத்தில் இன்று (17.03.2021) இடம்பெற்றது.
இதன் போது இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் றொஹான்டிசில்வா இந்நிகழ்வில் கலந்து கொண்டு இவ்விளையாட்டினை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.
வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் கே.முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் றொஹான்டி சில்வா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன,
உதவி மாவட்டசெயலாளர் சபர்ஜா, விளையாட்டு உத்தியோகத்தர், பூப்பந்து பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பூப்பந்து வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.