
வடிவேலு சில அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு பிரச்சனையில் இருந்தார். அதனால் சினிமா வாழ்க்கையை இரண்டு வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தார்.
இப்போது மறுபடியும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.அந்தப் படங்களில் வடிவேலுவின் முகபாவங்களைப் பார்க்கும் போதே சிரிப்பு தானாக வருகிறது.
இந்நிலையில் தற்போது படப்பிடிப்பை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் பிசியாகியுள்ளனர். படத்தை சித்திரை மாதம் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து கோடை விடுமுறையில் கோச்சடையான், விஸ்வரூபம்-2, நான் சிகப்பு மனிதன், மான்கராத்தே போன்ற மெகா படங்களும் திரைக்கு வருவதால், வடிவேலு படத்துக்காகவும் திரையரங்குகளை கைப்பற்றும் வேலைகள் நடக்கிறது.
ஆனால் இந்தப் படத்தை திரையிட இருந்த சில திரையரங்குகளுக்கு எச்சரிக்கை வருகிறதாம். இதனால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.





